தமிழ்நாட்டில் கொரோனா பரவலை அடுத்து தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் 10, 11ம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வு முடிவு ஆகியவற்றை கணக்கிட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து பொறியியல் மாணவர் சேர்க்கை படிப்புகளுக்கான விண்ணப்பம் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் விண்ணப்ப பதிவு நிறைவடைய உள்ள நிலையில், புதிய வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கணிதம், இயற்பியல், பாடங்களுடன் வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயம் என இருந்த நிலையில் வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தமுறை 10ம் வகுப்பு மதிப்பெண்ணுடன், 12ம் வகுப்பு கணிதம், இயற்பியல் மற்றும் விருப்ப பாடத்தின் மதிபெண், பிறந்த தேதி, ரேண்டம் எண் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.