குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பயணித்தார் என்று இந்திய விமான படை தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று காலை 1:00 மணி வானிலை பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கிழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெலிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 10-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக தெரிகிறது.

இந்த விபத்தில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்படரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்திருக்கிறார் என்று இந்திய விமான படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விமானப்படை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

‘‘தமிழகத்தின் குன்னூர் அருகே சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் பயணித்த ஐஏஎப் எம்-17வி5 ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளது.