திருவண்ணாமலையில் ஐமேத் அபாகஸ் சார்பில் அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நடிகர் தாமு பரிசுகளை வழங்கினார். திருவண்ணாமலை உள்பட 15 இடங்களில் இயங்கி வரும் ஐமேத் எனும் நிறுவனம் மாணவ-மாணவியர்களின் கணித திறனை மிக குறுகிய காலத்தில் மேம்படுத்திடும் வண்ணம் அபாகஸ் வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகிறது. இந்நிறுவனம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சாவூர், காரைக்கால் மற்றும் திருவண்ணாமலை உள்பட 15 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட 8-வது மாவட்ட அளவிலான...
Author: Abdur Rahman (Abdur Rahman)
திருப்பரங்குன்றத்தில் வெளியூர்காரர்களால்தான் பதற்றமான சூழல் ஏற்பட்டது: எம்எல்ஏ கோ.தளபதி
திருப்பரங்குன்றத்தில் வெளியூர்காரர்களால்தான் பதற்றமான சூழல் உள்ளது என திமுக எம்எல்ஏ கோ.தளபதி தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன், கோ.தளபதி எம்எல்ஏ மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கோ.தளபதி எம்எல்ஏ கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சினையுமில்லை, ஒற்றுமையுடன் வாழ்கிறோம். ஃப்வ்வெளியூர்க்காரர்கள் தான் இங்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். எனக்கு 72 வயதாகிறது. உச்சி பிள்ளையார் கோயிலில் முதலில் விளக்கு ஏற்றினர்.பின்னர், கிராம மக்கள்...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெகவின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்க வேண்டும்: தவெகவிற்கு பாஜக கேள்வி
பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை ஏற்றவே விடமாட்டோம் என்று திட்டமிட்டு சதி செய்து, சட்டத்தை மீறி நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், சிறுபான்மை வாக்கு வங்கிக்காக, மிகப் பெரிய அராஜகத்தை தமிழக அரசு செய்தது மன்னிக்க முடியாதது. திமுக அரசின் தூண்டுதலின் பேரில், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. திட்டமிட்டு மதக் கலவரத்தை தூண்டும் வகையில் திமுக கூட்டணி...
கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமே தவிர காவி தீபம் ஏற்றப்படக்கூடாது: அமைச்சர் கோவி செழியன்
கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமே தவிர காவி தீபம் ஏற்றப்படக்கூடாதுஎன உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், சட்டத்தின்படி எந்த நெறிமுறைகள் இருந்ததோ அதை முதலமைச்சர் செயல்படுத்தினார். தமிழகத்தில் மக்களிடையே, ஆன்மிகம் என்ற பெயரால் மதத்தின் பெயரில் ஒரு தீயை உருவாக்க நினைத்ததை தமிழக முதல்வர் முறியடித்துள்ளார்.அதன்படியே மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்களும் செயல்பட்டனர்....
எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பீகாரைத் தொடர்ந்து தமிழகம், கேரளம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசரகதியில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான வாக்காளர்களை மத்திய அரசுடன் இணைந்து...
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனை புகழ்ந்த பிரதமர் மோடி
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவையின் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், எளிய விவசாய பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர், தனது முழு வாழ்க்கையையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்துள்ளவர் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று , சி.பி. ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையின் தலைவராக இன்று தனது பணியை தொடங்கினார். அவரை வரவேற்று வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையில், “குளிர்கால கூட்டத் தொடர்...
ஜக்தீப் தன்கர் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மல்லிகார்ஜுனா கார்கே: பாஜக கடும் எதிர்ப்பு
மாநிலங்களவைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கருக்கு பிரிவுபசாரம் செய்வதற்கான வாய்ப்பு சபைக்கு கிடைக்காதது குறித்து மனம் வருந்துவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலங்களவையின் புதிய தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தனது பணியை தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி, மாநிலங்களவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஷ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அவருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றினர். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது உரையில், “மாநிலங்களவைத்...
பான் மசாலா போன்ற பொருட்களுக்கு புதிய வரி விதிப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
இந்தியாவில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி விகிதம் 5, 18 என, இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது. அதே நேரத்தில், சிகரெட், புகையிலை பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும், 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் பிறகு, கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது, தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விலைகள் குறையாமல் நடவடிக்கை எடுக்க மத்திய...
பிரேசில் முன்னாள் ஜெயிர் போல்சோனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி
அதிபர் ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில், பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ, 27 ஆண்டு தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.தென் அமெரிக்க நாடான பிரேசிலில், லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜெயிர் போல்சோனாரோ, 2019 முதல் 2022 வரை அதிபராக இருந்தார். கடந்த, 2022ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தொழிலாளர் கட்சி வேட்பாளர் லுாயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியை தழுவினார். ஆனால் இதை ஏற்க மறுத்து தேர்தல் மோசடி நடைபெற்றதாக புகார் கூறியதால்,...
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை: டாக்கா சிறப்பு நீதிமன்றம்
அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். புதிய அரசு அமைந்தவுடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை ஊழல் செய்தது, உட்பட...