தெற்கு ரயில்வேயில் பெங்களூர் தேர்வர்களை நியமிக்க கூடாது என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” தெற்கு ரயில்வேயில் உள்ள லோகோ பைலட் வருங்கால காலியிடங்களை பெங்களூர் ஆர் ஆர் பி தேர்வர்களைக் கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிகிறேன்.

இது தெற்கு ரயில்வேயில் வேலை தேடும் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிப்பதாகும். இம்முடிவை உடனடியாக கைவிட வேண்டுகிறேன்” இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.