நாட்டு மக்களிடம் நேற்று முன்தினம் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜனவரி 10-ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார்.
இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்ற எனது பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது சரியான நடவடிக்கை. கரோனா தடுப்பூசிகளும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் செலுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.