இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சீனியர் தேர்வு கமிட்டிக் குழு அறிவித்துள்ளது.

கடந்த 2022 செப்டம்பரில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார். முன்னதாக, இதே சிக்கல் காரணமாக அவர் ஆசியக் கோப்பை தொடரையும் மிஸ் செய்திருந்தார்.

அவர் போட்டிகளில் விளையாட போதுமான உடற்திறனுடன் இருப்பதை தேசிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. அதையடுத்து அவர் இலங்கைக்கு எதிராக வரும் 10-ம் தேதி தொடங்க உள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய ஒருநாள் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், சஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா , முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங்.