தமிழில் ‘ஆரம்பம்’, ‘பாகுபலி’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் ராணா. இவர் தந்தை சுரேஷ் பாபு, பிரபல தயாரிப்பாளர். இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரமோத் குமார் என்ற தொழிலதிபர், ராணா மற்றும் சுரேஷ் பாபு மீது கிரிமினல் வழக்குத் தொடுத்க்துள்ளார்.

ஹைதராபாத் பிலிம்நகரில் உள்ள தனது நிலத்தை காலி செய்ய வற்புறுத்தியதாகவும் ரவுடிகளை கொண்டு தன்னைத் தாக்கி கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

இதுபற்றி பஞ்சாரா ஹில்ஸ் போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, நாம்பள்ளி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இதன் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு ராணா மற்றும் சுரேஷ்பாபுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.