திரையுலகினரின் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் வரும் பிப்ரவரி 18-ம் தேதி தொடங்குகிறது.

திரையுலகினர் கலந்துகொண்டு விளையாடும் நட்சத்திர விளையாட்டு நிகழ்வான ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’ (Celebrity Cricket League – CCL) பிப்ரவரி 18-ம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருக்கிறது. இந்தியாவின் 8 மாநிலத்தைச் சேர்ந்த அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. ராய்ப்பூர், பெங்களூரு, ஹைதராபாத், ஜோத்பூர், திருவனந்தபுரம் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட ஆறு நகரங்களில் 19 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த 8 அணிகளுள் ஒன்று CCL கோப்பையை வெல்லும். மும்பை ஹீரோஸ் பிராண்ட் அம்பாசிடராக சல்மான்கான் மற்றும் கேப்டனாக ரித்தேஷ் தேஷ்முக் உள்ளனர். சென்னை ரைனோஸ் கேப்டனாக ஜீவா ஐகான் பிளேயராகவும், விஷ்ணு விஷால் நட்சத்திர வீரராகவும், தெலுங்கு வாரியர்ஸ் அணியில் வெங்கடேஷ் இணை உரிமையாளராகவும், அகில் கேப்டனாகவும் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

மோகன்லால் இணை உரிமையாளராக உள்ள கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியில் கேப்டனாக குஞ்சாக்கோ போபன் பங்கேற்கிறார். போனி கபூர் உரிமையாளராக உள்ள பெங்கால் டைகர்ஸ் அணிக்கு கேப்டனாக ஜிசுசென் குப்தாவும், கர்நாடகா புல்டோசர்ஸ் கேப்டனாக சுதீப், பஞ்சாப் தி ஷேர் அணிக்கு கேப்டனாக சோனுசூத் பங்கேற்கின்றனர். இந்த போட்டிகள் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.