தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ மாண்டஸ் புயல் கரையை கடந்து வலுக்குறைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழகத்தில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.

ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகம் புதுவை, காரைக்காலில் லேசான மழை பெய்யக் கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.