சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்ய உள்ளதாக தெரிவித்தது.  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் நேற்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.