வண்ணாரப்பேட்டை யார்டில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பயணிகள் பாதுகாப்பு மற்றும் ரயில்களின் இயக்கத்தை கருத்தில்கொண்டு தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வண்ணாரப்பேட்டை யார்டில் இன்று (13-ம் தேதி) இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 3.30 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கவுள்ளது. இதனால், சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே நாளை அதிகாலை 1.20 மணி ரயில்சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணம் – வேளச்சேரிக்கு நாளை அதிகாலை 4 மணி ரயில் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.