டிசம்பர் 5-ம் தேதி முதல் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் தாக்கம் குறைந்ததன் காரணமாக, டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தன. அடுத்தடுத்த தளர்வுகள் காரணமாக நேரம் மாற்றியமைக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் நேற்று வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தன.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சுப்பிரமணியன் இன்று அறிவித்துள்ளார்.

இது டிசம்பர் 5-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.