நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்

களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

இந்தியாவில் மின் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டும், இந்திய அரசு மின் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிகரிக்கும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பொதுப் போக்குவரத்திலும் மின் வாகனங்களைபயன்பாட்டுக்கு கொண்டுவரமுயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மின் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு ஃபேம் II திட்டத்தின் மூலம் மானியமும் வழங்கி வருகிறது.

ஆனால், மின் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை போதுமான அளவில் அமைப்பது சிக்கலாக இருந்து வருகிறது. இந்நிலையில், சார்ஜிங்நிலையங்கள் பரவலாகவும், மக்கள் எளிதாக பயன்படுத்தக் கூடிய வகையிலும் அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் சார்ஜிங் நிலையங்களை நாடுமுழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் அமைக்க நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான கொள்கை வரைவை ரயில்வே அமைச்சகத்துக்கு நிதி ஆயோக் அனுப்பியுள்ளது.

‘போக்குவரத்துத் துறையில் ரயில் நிலையங்கள் தனித்துவமான இடம் வகிக்கிறது. அந்த வகையில், மின் வாகனங்களுக்கான சார்ஜிங்நிலையங்கள் ரயில் நிலையங்களில் அமைக்கப்படுவது மக்களின் பயன்பாட்டுக்கு வசதியானதாக இருக்கும்’ என்று நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிதி ஆயோக்கும் ரயில்வே அமைச்ச கமும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. – பிடிஐ