பிராட்வே பேருந்து நிலையத்தை 21 மாடிகளுடன் ரூ.900 கோடி செலவில் வணிக வளாகங்களுடன் கூடிய போக்குவரத்து முனையமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அனைத்து வகையான போக்குவரத்து வசதிகளையும் இணைக்கும் வகையில் ‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’ என்ற போக்குவரத்து முனையங்களை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் முடிவு செய்துள்ளது. இதன்படி மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டத்தில் கிண்டி மற்றும் வண்ணாரப்பேட்டையில் மல்டி மாடல் இன்டகிரேஷன் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 12 இடங்கள் மல்டி மாடல் இன்டகிரேஷன் அமைக்கப்படவுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் மல்டி மாடல் இன்டகிரேஷன் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வந்தது. தற்போது இந்தத் திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் செயல்படுத்த உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார் செய்யப்படவுள்ளது. இந்த பிராட்வே போக்குவரத்து முனையத்தின் முக்கிய அம்சங்கள்: