சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. உட்கட்சித் தேர்தல் குறித்து மாவட்டச் செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க. 15 வது உட்கட்சி தேர்தலில், வட்டக் கழகத்திற்கு ஒரு அவைத்தலைவர், ஒரு செயலாளர், துணைச் செயலாளர்கள் மூவர் (ஆதிதிராவிடர்-பெண்-பொது) ஒரு பொருளாளர் என 6 நிர்வாகிகள், பகுதிப் பிரதிநிதிகளாக 5 பேர், வட்ட செயற்குழு உறுப்பினர்கள் 10 பேர் என 21 பேர் விண்ணப்பிக்க வேண்டும். போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் சைதை பஜார் சாலையில் உள்ள மாவட்டக் கழக அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. 25 ரூபாய் செலுத்தி விண்ணப்பப்படிவத்தை பெற்றுச் செல்கிறவர்கள் அதனை முறைப்படி பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணத் தொகையுடன் மீண்டும் மாவட்டக் கழக அலுவலகத்தில் குறிப்பிட்ட நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.
இன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை சோழிங்கநல்லூர் மத்திய பகுதி, சோழிங்கநல்லூர் மேற்கு, சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதிகளில் விண்ணப்பம் வழங்கப்படும். அதேபோல் நாளை மாலை 5 மணி முதல் 8 மணி வரை மதுரவாயல் வடக்கு, மதுரவாயல் தெற்கு, விருகம்பாக்கம் வடக்கு, விருகம்பாக்கம் தெற்கு பகுதிகளிலும், வருகிற 27ம் தேதி புதன் கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை வேளச்சேரி கிழக்கு, வேளச்சேரி மேற்கு சைதை கிழக்கு, சைதை மேற்கு பகுதிகளுக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும். அதேபோல் வருகிற 28ம் தேதி வியாழன் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சோழிங்கநல்லூர் தொகுதி விண்ணப்ப படிவங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். அதேபோல் அன்று மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை மதுரவாயல் மற்றும் விருகம்பாக்கம், வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 வரை வேளச்சேரி, சைதாப்பேட்டை தொகுதி விண்ணப்ப படிவங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.குறிப்பிட்ட நேரத்திற்குள் வரும் மனுக்கள் மட்டுமே ஏற்கப்படும். கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக ஆதரவாளர்களை உடன் அழைத்து வரவேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.