தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சேலம் – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை மறியல் கலவராமாக மாறிய நிலையில் போலீஸார் தடியடி பிரயோகத்தில் ஈடுபட்டடனர்.

சின்னசேலம் தனியார் பள்ளியில் படித்துவந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த புதன்கிழமை பள்ளிக் கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, கடந்த 4 நாட்களாக அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று இரவு முதல் விடிய விடிய மாணவியின் பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை போராட்டக்காரர்கள் பள்ளி மீது கல்வீச்சில் ஏற்பட்டனர். பள்ளி வாகனங்களை தீ வைத்து எரித்தனர். 3க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து நாசமாகின.

இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து அப்பகுதியே கலவர பூமியாக மாறியது. இதனால் விழுப்புரம் சரக டிஐஜி பண்டியன் உள்ளிட்ட போலீஸார் மற்றும் மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் காவல்துறை வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை, பள்ளிக்கூடம் மற்றும் அப்பகுதியில் நின்றிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.