நிலம் இல்லாதவர்களுக்கும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியில் ரூ.5.90 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித் தார். ப.வேலுச்சாமி எம்.பி., இ.பெ.செந்தில்குமார் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டிய பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன், தொழில்கடன் எனப் பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நிலம் இல்லாதவர்களுக்கும் கடன் வழங்க கூட்டுறவுத் துறை அலு வலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. கறவை மாடுகளை பராமரிக்க வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. விவசாயம் செழிக்கவும், விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படவும் தேவையான அனைத்து நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ப.க.சிவ குருசாமி, துணைத்தலைவர் த.ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். க.யுவராணி நன்றி கூறினார்.