மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் பெற்ற எழுத்தாளர், மருத்துவர் கு.கணேசனுக்கு ராஜபாளையத்தில் சேம்பர் ஆப் காமர்ஸ் வளாகத்தில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் டாக்டர் அறம் தலைமை வகித்தார். கிளை துணைத் தலைவர் ரமணி வரவேற்றார். கிளைத் தலைவர் ஆனந்தி, ராஜபாளையம் இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் ஜவகர்லால் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

“இந்து தமிழ் திசை” நாளிதழின் “மருத்துவ நட்சத்திரம்” விருதுபெற்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் த.அறம், கு.கணேசன், பி.வி.ஜவகர்லால், ஜெ.சண்முகராஜன் ஆகியோரை ராஜபாளையம் கம்பன் கழக துணைத் தலைவர் கோபால்சாமி, தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்ற நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பித்தனர். அதைத் தொடர்ந்து, `மருத்துவர் கு.கணேசன் வசீகரிக்கும் எழுத்தாளுமை’ குறித்த கருத்தரங்கு நடந்தது. இதில் எழுத்தாளர் கவிபாலா, கவிஞர் கண்மணிராசா, ராஜபாளையத்தைச் சேர்ந்த உமாசங்கர், கவிதா ஜவகர் ஆகியோர் பேசினர். பின்னர் மருத்துவர் கு.கணேசன் ஏற்புரையாற்றினார். கவிஞர் நாகா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள், எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.