நீலகிரி: மழை காரணமாக மண் நன்கு ஊறிய நிலையில் பாரம் தாங்காமல் ஊட்டி – குன்னூர் சாலையில் வேலிவியூ பகுதியில் தனியார் இடத்தில் உள்ள 15 அடி உயர கான்கீரிட் தடுப்புசுவர் இடிந்து விழுந்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.