டெல்லி: 6 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.