சென்னை: இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பபோகிறது என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்தில், ‘சமூகத்தில் சமநிலை ஏற்படுத்திய மகான் அன்னமாச்சாரி’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “இந்தியா முழுவதும் காவிமயம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக கட்சியை சேர்ந்தவர்களும் நினைத்து வருகின்றனர். கண்டிப்பாக அது நிறைவேறாது.
இந்திய மக்களை மொழியின் பெயராலோ சாதியின் பெயராலோ பிரிக்க முடியாது.

அண்ணாமலையைப் பொருத்தவரை தவறான தகவல்களைக் கூறி வருகிறார் அதனால் அவர் திருவண்ணாமலைக்கு சென்று சித்தராக இருப்பதுதான் நல்லது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here