கரும்பு வளர்ப்பு நிறுவனம் (Sugarcane Breeding Research Institute) என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூரில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள security guard பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு முன்னாள் படைவீரர்கள் (ex-servicemen ) விண்ணப்பித்து பயன்பெறலாம்.

கரும்பு வளர்ப்பு நிறுவனம், கோயம்புத்தூர், ICAR நிறுவனத்தில் பணிபுரிய தகுதி உடைய நபர்களுக்கு மாதத்திற்கு ரூ.21,420/ சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த நியமனம் ஆரம்பத்தில் ஒரு வருட காலத்திற்கு இருக்கும். ஒரு வருடத்திற்கு பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிப்பு செய்யப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள், 03.08.2022 அன்று காலை 10.00 மணிக்குக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நபர்கள் ICAR – கரும்பு வளர்ப்பு நிறுவனம், கோவையில் உள்ள தேர்வாணையத்தில் நேர்காணலுக்கு நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்கள், பணி நேரம், , முதலியன நிர்வாக அதிகாரி, ICAR-SBI, கோயம்புத்தூர் (மின்னஞ்சல்: ao.sbi@icar.gov.in ) PH. 042-2472621 என்ற முகவரியில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் .