‌‌குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை தொழில் உள்ளது. இதனை நம்பி பல்லாயிரக்கணக்கான சிறு குறு விவசாயிகள், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பறிக்கும் பசுந்தேயிலை பல்வேறு தொழிற்சாலைகளில் தேயிலை தூளாக உற்பத்தி செய்யப்படுகிறது.இவை குன்னூரில் உள்ள ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டு, பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், உலக சந்தையில் இந்திய தேயிலை மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.

இதற்கிடையே, குன்னூர் ஏல மையத்தில் கடந்தாண்டு ஜூன் மாதத்தில் ரூ.122 விற்பனையானது.  ஆனால், இந்தாண்டு ஜூன் மாத ஏலத்தில் ரூ.78 விற்பனையானது. இதனால், தேயிலை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டன் கணக்கில் தேயிலை தூள்‌ தேக்கமடைந்துள்ளது.எனவே, ஒன்றிய அரசு தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.