குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியரசுத் துணைத் தலைவரின் செயலகம் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப் பில் கூறியிருப்பதாவது:

தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுக்கு கரோனா பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. அவர் ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார். தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை தனி மைப்படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. -பிடிஐ