மாடுகளை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் மற்றும் அதன் பாதுகாப்பு இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்திய கலாச்சாரத்தில் மாடு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் நாடு முழுவதும் தாயாக போற்றப்படுகிறது. “வேதங்கள் மற்றும் மகாபாரதம் போன்ற இந்தியாவின் பண்டைய நூல்களில் இந்திய கலாச்சாரத்தை போற்றும் வகையில் நாடு முழுவதும் அறியப்பட்ட மாடு ஒரு முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது. நாட்டில் நிலவும் சூழ்நிலை கருத்தில் கொண்டு, மாடுகளை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் மற்றும் பசு பாதுகாப்பு இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், ஏனென்றால், ஒரு நாட்டின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கை பாதிக்கப்படும்போது, ​​நாடு பலவீனமடைகிறது என்பதை நாங்கள் அறிவோம்,” என நீதிபதி கூறினார்.

உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த 59 வயதான முஸ்லீம் ஒருவர் இந்த ஆண்டு மார்ச் மாதம் மாடு அறுத்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி யாதவ் முன்பு விசாரனைக்கு வந்தது. அப்பொழுது தீர்ப்பை வாசித்த நீதிபதி அவர் ஏற்கனவே பசுக்களை வெட்டியுள்ளார், சமூக சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளார். அவரை விடிவித்தால், அவர் மீண்டும் அதே குற்றத்தைச் செய்வார் என்று கூறி அந்த நபருக்கு ஜாமீன் வழங்க, நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அடிப்படை உரிமைகள் மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு மட்டுமல்ல, பசுவை வழிபடும் மற்றும் பொருளாதார ரீதியாக அதை சார்ந்து இருப்பவர்களுக்கும் உரியவை” என்று அவர் குறிப்பிட்டார்.