தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 13ம் தேதி திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 14ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
முன்னதாக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு பொதுப்பணித்துறையின் கீழ் இருந்த நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்டது. அத்துறையின் அமைச்சராக துரை முருகன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், முதல்முறையாக அந்த துறையின் மீதான மானியக் கோரிக்கை மீது சட்டமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.