கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் விரைவாக துப்பு துலக்கிய 15 போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.கோவை கோட்டைமேட்டில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஜமேஷா முபின் எனவும், கார் பற்றிய விவரங்களையும் 12 மணி நேரத்தில் போலீஸார் கண்டறிந்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக விரைவாக துப்பு துலக்கிய குழுவினரை டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.

அதன்படி, இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி (உளவுப்பிரிவு), சிவக்குமார் (உளவுப்பிரிவு), செந்தில்குமார் (சரவணம்பட்டி காவல் நிலையம்), அருண் (சைபர் கிரைம்), முருகன் (கோமங்கலம் காவல் நிலையம்), உதவி ஆய்வாளர்கள் ஆறுமுகம் (உளவுத்துறை), கார்த்திகேயன் (சிங்காநல்லூர் காவல் நிலையம்), ஆனந்தராஜன் (குன்னூர் காவல் நிலையம்), சோமசுந்தரம் (கொலக்கம்பை காவல் நிலையம்), தலைமைக் காவலர்கள் செந்தில் (உளவுத்துறை), செந்தில்குமார் (பீளமேடு காவல் நிலையம்), பாலபிரகாசம்( பீளமேடு காவல் நிலையம்), பிரகாஷ் (சரவணம்பட்டி), காவலர் தனராஜ் (சிறப்புப் பிரிவு), புகைப்படக் கலைஞர் பிரசாத் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ், ரொக்கத் தொகையை டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.