மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000, இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக முதலமைச்சர் அவர்களால் (மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்திக்குறிப்பு எண் 988. நாள் 30.10.2022) தாய்த் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு” எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினை “தமிழ்நாடு நாளாக” கொண்டாடப்படும் என அறிவிக்கப்பெற்றது. அதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000, இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெறவுள்ளன. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 05.07.2022 அன்று காலை 10.00 மணிக்கு மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளன.

பின்வரும் தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும்

1. தமிழ்நாடு உருவான வரலாறு

2. மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும்

3. தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள்

4. பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு

5. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம்

6. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார்

7. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி.

8. சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு

9. எல்லைப்போர்த் தியாகிகள்

10. முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு

அப்போட்டிகளுக்கு மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்திற்கும் முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பப்பெற்றுள்ளது. முதற்கட்டமாக கீழ்நிலையில் கட்டுரை. பேச்சுப் போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தெரிவு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்