சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை நேரு விளையாட்டரங்கத்தில் துவக்கி வைத்தார். பிரிவு வாரியான பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு, கல்லூரிகளை தேர்வு செய்வது குறித்து வழிகாட்டுதல் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; உடல் சோர்வான நிலையில் இருந்தாலும் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் புத்துணர்ச்சியை தருகிறது. கள்ளங்கபடம் இல்லாத உங்கள் முகங்களில் காணப்படும் அழகுதான் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. முதல்வராக வரவில்லை, சொந்த பிள்ளைகளாக எண்ணி உங்களை வாழ்த்த வந்துள்ளேன். மேற்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றி இணையத்தை பார்த்து அறியும் சூழல் தற்போது உள்ளது.

மாணவர்களாகிய நீங்கள்தான் மாநிலத்தின் அறிவுசார் சொத்துகள். ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதல்வர், மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு துறைகளிலும் முதல்வராக வரவேண்டும் என்பதற்காகவே தான் நான் முதல்வன் திட்டம். உயர்கல்வி, வேலைவாய்ப்புடன் கைநிறைய ஊதியம் பெறுவது மட்டுமல்ல; மாநிலத்தை உயர்த்த உங்களது ஆற்றல் பயன்பட வேண்டும். அரசு ஏற்படுத்தியுள்ள இந்த வாய்ப்பை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உயர்கல்வி, வேலைவாய்ப்புடன் கைநிறைய ஊதியம் பெறுவது மட்டுமல்ல; மாநிலத்தை உயர்த்த உங்களது ஆற்றல் பயன்படுகிறது. கல்வி, பன்முக ஆற்றல், படிப்பு அனைவரும் பின்பற்றும் பண்பாளர் என மாணவர்கள் அனைத்திலும் முதல்வராக வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அவரவர் துறைகளில் முதல்வராக வர வேண்டும்.

அதிக அளவில் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கல்லூரி கனவு நிகழ்ச்சி மற்ற மாவட்டத்தில் ஜூன் 29,30 ஜூலை 1,2 ஆகிய தேதிகளில் நடைபெறும். தமிழ்நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன, மாணவர்களின் உயர்பண்புக்கு வழிகாட்டியாக கல்லூரிக் கனவு நிகழ்ச்சி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.கல்வியை சிறுமைப்படுத்தி பேசும் யாருடைய பேச்சையும் நீங்கள் காதில் வாங்காதீர்கள். மாணவர்கள் உயர்க்கல்வியில் தேர்ச்சி பெற்று அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் என பார் புகழ விளங்க வேண்டும். பொறியியல், மருத்துவம் ஆகிய 2 படிப்புகளை மட்டும் கனவாக நினைக்க வேண்டாம். பல்வேறு துறைகள் உள்ளது. அதை தேர்ந்தெடுத்து படித்து நிபுணர்த்துவம் பெற வேண்டும். படியுங்கள், படியுங்கள், பகுத்தறிவோடு சிந்தியுங்கள் எனவும் முதல்வர் அறிவுரை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here