விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மின்சார இருசக்கர வாகனம் தீ பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த வாகனங்கள் மீதும் தீ பரவியதால் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.