2021-22-ம் நிதி ஆண்டில் மின் வாகனங்களின் சில்லறை விற்பனை 3 மடங்கு உயர்ந் திருப்பதாக ஆட்டோ மொபைல் டீலர் சங்க கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் 4,29,217 மின் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 2020-21-ம் நிதி ஆண்டில் விற்பனை 1,34,821 ஆகவும், 2019-20-ல் 1,68,300 ஆகவும் இருந்தது. சென்ற நிதி ஆண்டில் இரு சக்கர மின் வாகனங்களின் விற்பனை 2,31,338 ஆக உள்ளது. 2020-21-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிகம். இரு சக்கர மின் வாகனங்கள் விற்பனையில் முன்னிலையில் உள்ள ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் 65,303 இரு சக்கர மின் வாகனங்களை விற்றுள்ளது.