பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத வெளிநாட்டு முதலீடு தொடர்பாக பனாமா ஆவண லீக் விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யாராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அண்மையில் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த செய்தியாளர் கூட்டமைப்பு வெளியிட்ட பனாமா ஆவண பட்டியலில் 700க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.
இந்த பட்டியலில் பிரபல நடிகையும், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மருமகளான ஐஸ்வர்யா ராய் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஐஸ்வர்யா ராய், அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்திருப்பதாக பனாமா லீக் ஆவணங்களில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.ஏற்கனவே அமலாக்கத்துறை இருமுறை சம்மன் அனுப்பியபோது, விசாரணையை ஒத்திவைக்க ஐஸ்வர்யா ராய் கோரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.