Site icon Metro People

யானையின் மாண்பை உறுதிசெய்வது மனித குலத்தின் மாபெரும் கடமை: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

கம்பீர விலங்கான யானையின் மாண்பை உறுதி செய்வது மனிதகுலத்தின் கடமை என்றுமுதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலகில் ஆசியா மற்றும்ஆப்பிரிக்க நாடுகளில் யானைகள் அதிகமாக வாழ்கின்றன. வேட்டையாடுவது, வாழ்விடங்கள் அழிக்கப்படுவது, வேளாண் நிலங்களில் உணவு தேடி வரும்போது மனிதர்களுடன் ஏற்படும்மோதல் காரணமாக யானைகள் அழிந்து வருகின்றன.

தென் மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக ரயில் மோதியும், விதிகளை மீறி வைக்கப்பட்ட மின்சார வேலிகளில் சிக்கியும், வெடிகளை மறைத்து வைத்து கொடுக்கப்படும் உணவுகளை உண்ணும்போதும் ஏராளமான யானைகள் உயிரிழக்கின்றன. இவற்றை தடுப்பது தொடர்பான வழக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது.

யானைகள் தினம்

யானைகளின் மரணங்களை தடுக்க தமிழ்நாடு வனத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகள் சூழலியல் பாதுகாப்பில் முக்கிய பங்குவகிக்கின்றன. இவற்றை பாதுகாக்கவும், இதுபற்றி மக்களிடம்விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலக யானைகள் தினம் 2012-ம்ஆண்டு முதல், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

வேளாண் நிலங்கள் மற்றும்ஊருக்குள் நுழையும் யானைகளை வனத் துறையினர் பிடித்து, கும்கி யானைகளாக மாற்றி, அதன்மூலம் பொதுமக்களை அச்சுறுத்தும் யானைகளை பிடிப்பது வழக்கம்.

ஆனால் வனத்துறை சமீபத்தில் பிடித்த ‘ரிவால்டோ’ யானை, முதல்முறையாக மீண்டும் காட்டில் விடப்பட்டுள்ளது.

இதனிடையே, உலக யானைகள் தினமான நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

ரிவால்டோவின் காயத்துக்கு சிகிச்சை அளித்து, மீண்டும் காட்டுக்கு அனுப்பிய தமிழகவனத் துறைக்கு பாராட்டுகள்.

உலக யானைகள் நாளான இன்று, யானைகளை பாதுகாக்கவும், அவற்றை அடைத்துவைத்து துன்புறுத்துவதைமுடிவுக்கு கொண்டுவரவும்உறுதியேற்போம். கம்பீர விலங்கான யானையின் மாண்பை உறுதிசெய்வது மனிதகுலத்தின் மாபெரும் கடமை. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version