அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பொதுக் குழு மேடைக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி. இதனைத் தொடர்ந்து செயற்குழு கூட்டம் தொடங்கியது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் பொதுக் குழு மேடைக்கு வந்து அமர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. அவருடன் தமிழ் மகன் உசேன் மேடையில் அமர்ந்துள்ளார்.

கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அமர்ந்துள்ளனர். காலை 6.30 மணிக்கு பசுமை வழிச்சாலையில் இருந்து புறப்பட்ட இபிஎஸ் 9 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பு வந்த உடன் பொதுக் குழு மேடையில் வந்து அமர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. இதனைத் தொடர்ந்து செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.