ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலையொட்டி, ஒரே மேடையில் அதிமுக- திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக- அதிமுக சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர்கள் பொது மேடை நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற் றார். பொருளாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். முதலில், அதிமுக கூட்டணி சார்பில், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், பி. தங்கமணி, கே.வி. ராமலிங்கம், பாண்டியராஜன், வேட்பாளர் தென்னரசு, தமாகா தலைவர்கள் விடியல் சேகர், யுவராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிமுகவினர் புறப்பட்டுச் சென்றபிறகு, திமுக கூட்டணி சார்பில், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, கே.என்.நேரு, சு.முத்துசாமி, பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மெய்ய நாதன், வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.