மணிலா: பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்க்கோஸின் மகனான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸ்ஸின் அதிபராக பதவியேற்றார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட் சர்ச்சைகளின் நாயகர். இவர் பிலிப்பைன்சில் யாரேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும்,விற்றாலும் அவர்களை சுட்டுக் கொல்ல ஆணை பிறப்பித்தவர். சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி டுட்ரேட் அச்சம் கொண்டது இல்லை. இதன் காரணமாக உலகம் முழுவதிலுள்ள மனித உரிமை அமைப்புகள் இவருக்கு வலுவான் கண்டனங்கள் தெரிவித்து வந்தன.

இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் அதிபர் பதவியிலிருந்து ரோட்ரிகோ டுட்ரேட் விடைபெற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸின் அதிபராக இன்று பதவி ஏற்றார்.

பதவியேற்பு விழா பிலிப்பைன்ஸின் தேசிய அருகாட்சியகத்தில் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், பிலிப்பைன்ஸில் சர்வாதிகாரமாக ஆட்சி செய்த பெர்டினாண்ட் மார்கோஸின் மகன் ஆவார்.

யார் பெர்டினாண்ட் மார்கோஸ்: இந்த பிலிப்பைன்ஸை சுமார் 20 ஆண்டுகளாக இவர் ஆட்சி செய்தார். பெர்டினாண்ட் மார்க்கோஸ் ஆட்சியில் நீதிமன்றங்கள், வணிகங்கள், ஊடகங்கள் என அனைத்தும் அவரது காட்டுப்பாட்டில் இருந்தனர். அவரை எதிர்த்த அரசியல் எதிரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பெர்டினாண்ட் மார்கோஸை ஜூனியரை பிலிப்பைன்ஸ் மக்கள் போங் போங் என்றே அழைக்கின்றனர். முன்னதாக, ரோட்ரிகோ டுட்ரேட் மகள் சாரா டுட்ரேட் பிலிப்பைன்ஸ் துணை அதிபராக கடந்த வாரம் பதவியேற்றார்.

 

பதவையேற்பு விழாவில் பெர்டினாண்ட் மார்கோஸை ஜூனியர் பேசியதாவது, “சுதந்திரத்திற்கு பிறகு அந்த மனிதர் ( பெர்டினாண்ட் மார்க்கோஸ்) எவ்வளவு சாதனைகளை செய்தார் என்பதை நான் பார்த்திருக்கிறேன். தற்போது அவரது மகனின் கையில் ஆட்சி வந்திருக்கிறது. நான் தவறு செய்யும் யாரையும் விடமாட்டேன். என்னிடம் உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது.” என்று பேசினார்.