அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர் உயிரிழந்ததை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த், “என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.