Site icon Metro People

மதுரையில் நடிகர் சிம்புவிற்கு 1000 அடியில் பேனர் வைத்த ரசிகர்கள்

மஹா திரைபடத்திற்காக மதுரையில் பாலத்தின் மீது 1000 அடிக்கு பிளக்ஸ் பேனர் வைத்து கவனம் ஈர்த்த சிம்பு ரசிகர்கள்.

நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50வது  திரைப்படமான மஹா வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நாசர், கருணாகரன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து உள்ளன. இதில் சிலம்பரசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

அதனை வரவேற்கும் விதமாக மதுரை குருவிக்காரன் சாலைப் பாலத்தின் மீது  மதுரை சிட்டி எஸ்.டி.ஆர் வெறியர்கள் என்ற ரசிகர்கள் சார்பில் 1000 அடிக்கு பிளக்ஸ் பேனரை அதிகாலை வைத்து ட்ரோன் மூலம் படம் பிடித்து அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றி உள்ளனர். அந்த காட்சி தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.

“மஹா படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிலம்பரசன் நடிப்பதை கொண்டாடும் விதமாக தற்பொழுது ஆயிரம் அடிக்கு போஸ்டரை அடித்து உள்ளதாகவும் மஹா படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி அடையச் செய்வோம் என்றும்” மதுரை ரசிகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version