இயக்குநர் முத்தையாவுடன் நடிகர் ஆர்யா இணையும் புதிய படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

‘விருமன்’ படத்திற்கு பிறகு முத்தையா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஆர்யா. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சித்தி இதானி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் தலைப்புடன் கூடிய முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என பெயரிடப்பட்டுள்ளது. முதல் பார்வையை பொறுத்தவரை முறுக்கு மீசையுடன், தொடை தெரியும்படி வேட்டியை கட்டிக்கொண்டு நாற்காலியில் கெத்தா அமர்ந்திருக்கும் ஆர்யாவின் பின்புறம் ரஜினியின் ‘பாட்சா’ பட புகைப்படம் வரையப்பட்டுள்ளது.