சென்னை: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேச்சுக்கு சி.வி.சண்முகம் மறுப்பு தெரிவித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது என்ற வைத்திலிங்கம் கருத்துக்கு மறுப்பு கூறினார். வைத்திலிங்கம் எழுப்பியுள்ள 5 கேள்விகளுக்கு பதில் அளிக்கிறோம். ஆண்டுக்கு ஒருமுறை அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது விதி என்று குறிப்பிட்டார்.