வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதில் மேலும் தாமதம் நீடிக்கிறது. தெற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 4.5 கி.மீ. உயரத்துக்கு நீடிக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தாழ்வாக உள்ளதால் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இதுவரை உருவாகவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.