கோமுகி அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் வரத்துதண்ணீர் அப்படியே வெளியேற் றப்பட்டது. இதேபோன்று தென்பெண்ணையாற்றிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர மக்களுக்கு அரகண்டநல்லூர் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை 46 அடி வரைநீரை தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர் கொள்ளளவு 560.96 மில்லியன் கனஅடி. இந்த அணையிலி ருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5,865 ஏக்கர் விவசாய நிலமும், பிரதான கால்வாய் பாசனத்தின் மூலம் 5,000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெற்று வருகிறது.

கோமுகி அணையின் மூலம்கச்சிராயபாளையம், கள்ளக் குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட கிராமங் களை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும்கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண் டார்குடி, கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்க ளில் அணைகள் கட்டப்பட்டு, அதன்மூலம் ஏரிகளில் நீரை நிரப்பியும் விவசாயம் செய்து வருகின்றனர்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கள் ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அணையின் நீர் மட்டம் 44 அடியாகவும், மொத்த நீர் பிடிப்பு 489.56 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. தற்போது கல்வராயன்மலையில் மல்லிம் பாடி, மாயம்பாடி, கல்பொடை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து 800 கன அடியாக உள்ளது. இதனால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. எனவே அணையின் பாதுகாப்புக் கருதி, வரத்து தண்ணீர் அப்படியே பாசன வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று விழுப்புரம்மாவட்டம் தென்பெண்ணை யாற்றில் வெள்ளநீர் பெருக் கெடுத்து ஓடுவதால், அரகண்ட நல்லூர் பகுதியில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்வதோடு, யாரும் ஆற்றில் இறங்கவேண்டாம் என அரகண்டநல்லூர் போலீ ஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.