குஜராத் மாநிலம் அனைத்துத்துறைகளிலும் வெற்றியும், வளர்ச்சியும் அடைவது பெருமிதம் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் பனஸ்கந்தாவில் பல திட்டங்களை தொடங்கி வைத்தபின் பிரதமர் நரேந்திரமோடி பேசினார். வித்யா சமிக்ஷா கேந்திரா மூலம் நாடு முழுவதும் கல்வி துறையில் பெரிய மாற்றங்களை கொண்டுவர முடியும் என மோடி தெரிவித்தார்.