பொல்லாதவன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ள இயக்குனராக வெற்றியடைந்துள்ளவர் இயக்குனர் வெற்றிமாறன்.

தனது பெயரில் உள்ளது போல் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெற்று விருதுகளை அள்ளிக்குவித்தன. நடிகர்களுக்காக படம் பார்க்க சென்ற ரசிகர்களை இயக்குநருக்காக படம் பார்க்க வைத்த பெருமை இவரையே சேரும்.

பொல்லாதவனில் இணைந்த தனுஷ்-வெற்றிமாறன் காம்போ அதன்பின்னர், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தொடர்கிறது. இதில் ஆடுகளம் மற்றும் அசுரன் தேசிய விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.