புதுடெல்லி: அக்டோபர் 1ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. காசு மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப். 28ம் தேதி வரை டெல்லிக்குள் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

டெல்லிக்குள் தினசரி 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை சரக்கு வாகனங்கள் நுழைவதாக கூறப்படுகிறது. வழக்கமாக டெல்லியில் சரக்கு வாகனங்கள் போன்றவறை நவம்பர் அல்லது டிசம்பரில் 20 நாட்கள் வரை நுழைய தடை விதிக்கப்படும். இந்த முறை அந்த தடைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.