பெட்ரோல், டீசல் விலை மீண்டும் லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.108.21-க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.98.21-ஆக உயர்ந்துள்ளது.

137 நாட்களுக்கு பின்னர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை கடந்த வாரத்தில் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை கணிசமாக அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில் நேற்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு பெட்ரோல் ரூ.107.45-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.97.52-க்கும் விற்பனையாகியது.

இந்நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களில் 10 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை ரூ.6.81 அதிகரித்துள்ளது.