சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.40 ரூபாயாகவும் ஒரு லிட்டர் டீசலின் விலை 91.43 ரூபாயாகவும் உள்ளது.

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 111 டாலரை தொட்டு நிலையில் இந்தியாவில் தேர்தல் காரணமாகவே பெட்ரோல் டீசல் விலைகள் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த நாட்களாக சர்வதேச சந்தையில் உக்ரைன் போர் காரணமாக கச்ச எண்ணெய் விலை அதிகரிப்பதால் விலை உயரலாம் என கணிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.102. 91 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.92.95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து  ரூ.104.43-க்கும், டீசல் விலை லிட்டருக்கு  76 காசுகள் உயர்ந்து ரூ.94.47-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலையில் ரூ.3.03 ஆகவும் , டீசல் விலையில் ரூ.3.04 ஆகவும் அதிகரித்துள்ளது. இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவிலேயே அதிகப்படியான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் நகரமாக மும்பை உள்ளது.84 காசுகள் அதிகரித்து ரூ.113.35 ஆக விற்பனை செய்யப்படுகிறது.