தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் டெல்லியில்மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் மருத்துவத் துறை தொடர்புடைய 7 கோரிக்கைகள் அடங்கியமனுவை கொடுத்தார்.

மனுவில் உள்ள கோரிக்கைகள்

நீட் தேர்வை தமிழக அரசுஎதிர்க்கிறது. ஏழை மாணவர்கள்மருத்துவம் படிப்பதில் உள்ள இன்னல்களை கருத்தில் கொண்டுஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரையின்படி 2021செப்.19-ல் தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆளுநர் சட்டப்பேரவையின் மறுபரிசீலனைக்காக சட்ட முன்வடிவை கடந்த பிப்ரவரி 1-ம் தேதிசட்டப்பேரவை செயலாளருக்கு திருப்பி அனுப்பினார். அந்தசட்ட முன்வடிவு மீண்டும் சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் அனைத்து தொழிற்கல்வி இடங்களை நிரப்ப தமிழக அரசை அனுமதிக்க வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் கல்லூரி கட்டுமான பணியை விரைவாக தொடங்ககுழுவை அமைக்க வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2-வது எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரிஇல்லாத ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க அனுமதிவழங்க வேண்டும். உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள், இந்தியாவிலேயே மருத்துவப் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்டி (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) படிப்புக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.