Site icon Metro People

ஷூட்டிங்கில் இருந்து விஜய் வந்ததும் பிரச்னை சரியாகிடும் – மனம் திறந்த எஸ்.ஏ.சந்திர சேகர்

எல்லாத்தையும் நம்மால் செய்ய முடியாது என்பதற்காக பாண்டிச்சேரி தலைவராக இருந்தவர் தமிழகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

மூத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகர் நியூஸ் 18 தமிழுடனான நேர்க்காணலில் கலந்துக் கொண்டார். அவர் பகிர்ந்துக் கொண்ட விஷயங்களை இங்கே தொகுத்து தருகிறோம்.

அப்போது அவரிடம் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதன் பின்னணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், விஜய்யின் முதல் படம் 1992 டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆனது. என்னுடைய மகனை நான் அறிமுகப்படுத்துகிறேன். யார் யார் கிட்டயோ கேட்டு பார்த்தேன். கடைசியில் சவுத்ரி சார். ’நீயே பெரிய டைரக்டர், தயாரிப்பாளர்… எதற்கு மற்றவர்களை எதிர்பார்க்கிறாய்? நீயே எடு’ என்று கூறினார். அப்படித்தான் முதல் படம் ஆரம்பமானது.

ஆனால் படம் ஓடவில்லை. சரி நடிக்கணும் என்று வந்துவிட்டார், அவரை நடிகராக மாற்றுவது ஒரு தகப்பனாக எனது கடமை. இதற்கிடையே எனக்கென்று சில ரசிகர்கள் இருந்தார்கள். ஆக தனது ரசிகர் மன்றத்தை விஜய் ரசிகர் மன்றமாக மாற்றினேன். சமூகத்திற்காக படம் எடுத்தவன் நான். விஜய்யும் சமூக பொறுப்போடு வரவேண்டும் என்பதற்காக, பின்னாளில் அதை விஜய் நற்பணி மன்றமாக மாற்றினேன். அதிலிருந்த ரசிகர்களை ஊக்கப்படுத்தி, கிராமங்கள்தோறும் கிளைகளை உருவாக்கினேன். இதற்கிடையே விஜய்யும் ஏழெட்டு படம் பண்ணினார். நிறுவன தலைவர், பொருளாளர் என விஜய் மக்கள் இயக்கம் அடுத்த பரிணாமம் அடைந்தது

எல்லாத்தையும் நம்மால் செய்ய முடியாது என்பதற்காக பாண்டிச்சேரி தலைவராக இருந்தவர் தமிழகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தான் புஸ்ஸி ஆனந்த். இதற்கிடையே விஜய்யை நாங்கள் பார்க்க சென்றதாகவும், அவர் ஷோபாவை மட்டும் உள்ளே அழைத்ததாகவும், அதனால் நாங்கள் கோபித்துக் கொண்டு வந்து விட்டதாகவும் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை. இப்போது தான் மன்றத்தைக் கலைத்திருக்கிறேன். அவர் ஷூட்டிங்கில் இருந்து வந்ததும் எல்லாம் சரியாகிடும்” என்றார்.

Exit mobile version