தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் மற்றுமொரு குறைந்த காற்றழுத்த பகுதி நாளை உருவாகும்.  ஒட்டுமொத்தமாக 19 மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் நவம்பர் 17,18 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வரும் நவம்பர் 18-ம்தேதி தெற்கு ஆந்திரா – வட தமிழகத்தை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நிலவக்கூடும்.

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் மற்றுமொரு குறைந்த காற்றழுத்த பகுதி நாளை உருவாகும்.  ஒட்டுமொத்தமாக 19 மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 15, 16 தேதிகளில் ஈரோடு, நீலகிரி, கோவை,திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

17, 18 தேதிகளில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுவை, காரைக்கால், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.